சீர்காழி அருகே மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் படுகாயம்

சீர்காழி அருகே மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் படுகாயம்
X
சீர்காழி அருகே மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் படுகாயம் அடைந்தார். மேலும் சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகளை அரசு மராமத்து பணி செய்து தரவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ராதாநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் புனிதா. இவர் நேற்று இரவு வழக்கம் போல வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது தொகுப்பு வீட்டில் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்தது.

புனிதாவின் தலையில் பலத்த காயம், மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த புனிதாவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார் மேலும் சீர்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டாரம் முழுவதும் ஆயிரக்கணக்கான அரசின் தொகுப்பு வீடுகள் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது,

இதில் வாழும் ஏழை மக்கள் உயிர் பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எப்பொழுது வேண்டுமானாலும் தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் மனு அளித்தோம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தொகுப்பு வீடுகளை மறுசீரமைப்பு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர

Tags

Next Story
ai marketing future