தமிழக விவசாயிகளின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படம்

தமிழக விவசாயிகளின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படம்
X

மயிலாடுதுறையில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பேட்டி அளித்தனர்.

தமிழக விவசாயிகளின் வாழ்ககையை பிரதிபலிக்கும் திரைப்படத்தை பார்ப்பதற்காக மயிலாடுதுறையில் விவசாயிகள் குவிந்தனர்.

திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் லாபம்.இந்த திரைப்படம் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

மயிலாடுதுறையில் திரையிடப்பட்டுள்ள இந்த படத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 6 மணி காட்சிக்கு குடும்பத்தினருடன் காண வந்தனர். விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் 10 மாதமாக டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு மருந்தாக இந்த படம் அமைந்துள்ளதாகவும், 60 ஆண்டுகளாக பெரும் முதலாளிகள் அரசியல்வாதிகளால் விவசாயிகள் ஏமாற்றப்படுவதையும் விவசாயிகள் ஒற்றுமையுடன் போராடினால் வெற்றி பெறலாம் என்றும் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future education