கூலித் தொழிலாளி இறப்பை சிபிசிஐடி விசாரிக்கணும்

கூலித் தொழிலாளி இறப்பை சிபிசிஐடி விசாரிக்கணும்
X
சீர்காழி நெப்பத்தூர் கூலித்தொழிலாளி மர்மமான இறப்பு விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா நெப்பத்தூர் கிராமத்தில் செங்கல் சூளையில் மர்மமான முறையில் இறந்த நிம்மேலி சீனிவாசன் உடலை சீர்காழி அரசு மருத்துவமனை இருந்து வாங்காமல் உறவினர்கள் மற்றும் கம்யூ.கட்சி , விசிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து 7வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறையில் மயிலாடுதுறை, நீடூர், ஆக்கூர்முக்கூட்டு, செம்பனார்கோவில், பெரம்பூர், மணல்மேடு உட்பட 20இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது,

செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக விசிக. இளையராஜா தலைமையில் 21 பேர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், நீடூரில் 18 பேர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் கைதுசெய்த போலீசார் தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!