முதல்வரை விமர்சனம் செய்த பா.ஜ.க. ஓ.பி.சி.அணி மாநில துணை தலைவர் கைது
கைது செய்யப்பட்ட அகோரம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காடு பகுதியை சேர்ந்தவர் க.அகோரம், இவர் பா.ஜ.க.வில் ஓ.பி.சி அணியின் மாநில துணை தலைவராக பொறுப்பில் உள்ளார். நேற்று பா.ஜ.க. சார்பில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அகோரம் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் அகோரம், தமிழக முதல்வரை பற்றியும், தமிழக அரசை பற்றியும் தரக்குறைவாக பேசியுள்ளார். இதனையடுத்து ஜெயங்கொண்டம் காவல்துறையினர் அவர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று திருவெண்காடு வந்த ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீசார் அகோரத்தை அவர் வீட்டில் கைது செய்தனர்.
பின்னர் அவரை சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக் முன்னிலையில் மயிலாடுதுறை டி.எஸ்.பி அலுவலகத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அகோரத்தை ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu