முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை அனுப்பிய பா.ஜ.க.வினர்

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை அனுப்பிய பா.ஜ.க.வினர்
X

மயிலாடு துறையில் முதல்வருக்கு வாழ்த்து அட்டை அனுப்பிவிட்டு கோஷம் போட்ட பா.ஜ.க.வினர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மயிலாடுதுறை பா.ஜ.க.வினர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை அனுப்பினர்

இஸ்லாமியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட மாற்று மதத்தினருக்கு பண்டிகை வாழ்த்து தெரிவிக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ.க. சார்பில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை அனுப்பும் நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு பா.ஜ.க. நகர தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் வெங்கடேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சேதுராமன் ஆகியோர் பங்கேற்று, விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்து 1001 தபால் அட்டைகளை அனுப்பினர். மற்ற மதத்தினருக்கு பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிக்கும் தமிழக முதல்வர் இந்துக்களுக்கு மட்டும் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிக்காததை சுட்டிக்காட்டும் வகையில் இந்த வாழ்த்து அட்டைகள் அனுப்பப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

முன்னதாக தமிழக முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதில், பா.ஜ.க. மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!