மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் 93- வது திங்கள் கூட்டம் நடைபெற்றது

மயிலாடுதுறை  திருக்குறள் பேரவையின் 93- வது திங்கள் கூட்டம் நடைபெற்றது
X

மயிலாடுதுறையில் நடைபெற்ற திருக்குறள் பேரவைக்கூட்டம்

சென்னை அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் நிகழ்ச்சி இயக்குநர் சுந்தர ஆவுடையப்பன் பங்கேற்று பேசினார்

மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவையின் 93-வது திங்கள் கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் தமிழறிஞர்கள் பலரது முயற்சியால் மயிலாடுதுறை திருக்குறள் பேரவை என்ற தமிழ் அமைப்பு தொடங்கப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவையின் 93-வது திங்கள் கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி பள்ளியில் பேரவைத் தலைவர் சிவசங்கரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சென்னை அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் நிகழ்ச்சி இயக்குநர் சுந்தர ஆவுடையப்பன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 'உள்ளம் உடைமை உடைமை" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!