தரங்கம்பாடி பேரூராட்சியில் பேராசிரியர் அன்பழகன் 2-ம் ஆண்டு நினைவஞ்சலி

தரங்கம்பாடி பேரூராட்சியில்  பேராசிரியர் அன்பழகன் 2-ம் ஆண்டு நினைவஞ்சலி
X

பேராசிரியர் அன்பழகன் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தரங்கம்பாடி பேரூராட்சியில் பேராசிரியர் அன்பழகன் 2-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி பொறையார் கடைவீதியில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் அறிவுறுத்தலின் பேரில் ஒன்றிய பிரதிநிதி சடகோபன் ஏற்பாட்டில் தரங்கம்பாடி பேரூராட்சியில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட சேர்மன்- துணைச் சேர்மன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் சார்பில் தி.மு.க. மறைந்த பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

பொறையார் கடைவீதியில் அமைக்கப்பட்டு இருந்த பேராசிரியர் க.அன்பழகன் திருவுருவ படத்திற்கு நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம். சித்திக் உட்பட, பலர் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story