தரங்கம்பாடி பேரூராட்சி தேர்தல்: திமுக வேட்பாளர்கள் இறுதிக் கட்ட பிரசாரம்

தரங்கம்பாடி பேரூராட்சி தேர்தல்: திமுக  வேட்பாளர்கள் இறுதிக் கட்ட பிரசாரம்
X

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர்கள்

பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட 9, 10, 13 உள்ளிட்ட வார்டுகளில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் செல்லப்பா, கவிதா, சரஸ்வதி வெற்றிவேல் தரங்கை பேரூராட்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பொதுமக்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து உதயசூரியன் சின்னத்திற்கு அளிப்பதாக உறுதி அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல்மாலிக், பி.எம்.அன்பழகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் மற்றும் திமுக கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள், ஏராளமான பொதுமக்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ai automation in agriculture