தரங்கம்பாடி ஊரடங்கு: வெள்ளரிபிஞ்சு வியாபாரம் வீழ்ச்சி-விவசாயிகள் வேதனை

தரங்கம்பாடி ஊரடங்கு: வெள்ளரிபிஞ்சு வியாபாரம் வீழ்ச்சி-விவசாயிகள் வேதனை
X

வெள்ளரி பிஞ்சுகளை அறுவடை செய்யும் விவசாயிகள்.

தரங்கம்பாடியில் ஊரடங்கு காரணமாக வெள்ளரி பிஞ்சு வியாபாரம் வீழ்ச்சியடைந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காழியப்பநல்லூர், மாணிக்கப்பங்கு, சின்ன ஆணைக்கோவில் ஆகிய கிராமப்பபகுதிகளில் விவசாயிகள் வெள்ளரி, சாகுபடி செய்து உள்ளனர்.
தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் சின்ன ஆணைக்கோவில் கிராமத்தில் விவசாயிகள் வெள்ளரிப் பிஞ்சுகளை அறுவடை செய்து வருகின்றனர்.

அறுவடை செய்த வெள்ளரிப் பிஞ்சுகளை தினந்தோறும் மயிலாடுதுறை, செம்பனார்கோவில் காரைக்கால் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்துவந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் வியாபாரிகள் வராததால் அறுவடை செய்த வெள்ளரிப் பிஞ்சுகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!