தை அமாவாசை: பூம்புகாரில் சங்கமுக தீர்த்தத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
பூம்புகாரில் காவிரி ஆறு கடலில் கலக்கும் சங்கமுக தீர்த்தத்தில் தை அமாவாசையை முன்னிட்டு மூதாதையருக்கு தர்பணம் செய்த வாரிசுகள்
பூம்புகாரில் காவிரி ஆறு கடலில் கலக்கும் சங்கமுக தீர்த்தத்தில் தை அமாவாசையை முன்னிட்டு மூதாதையருக்கு தர்பணம் செய்து ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.
தை மாதத்தில் வரும் அமாவாசை தினம் இந்துக்களின் புனித தினமாக கடைபிடிக்கப்படுகிறது இன்று தங்கள் முன்னோர்களுக்கு புண்ணிய தீர்த்தங்களில் நீராடி தர்ப்பணம் அளிப்பது நன்மை பயக்கும் என்பது இந்துக்களின் ஐதீகம். இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த பூம்புகாரில் காவிரி ஆறு கடலுடன் கலக்கும் சங்கமுக தீர்த்தத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பலிகர்ம பூஜைகளை செய்தனர் .இதில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புனித நீராடி வழிபாடு செய்தனர்.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் தை அம்மாவாசையில் கவேரி சங்கமத்தில் கூட தடை விதிக்கபட்டிருந்தது குறிப்பிட்டத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu