கொரோனா கட்டுப்பாடு: மயிலாடுதுறை பகுதி கோயில்கள் மூடல்

கொரோனா கட்டுப்பாடு: மயிலாடுதுறை பகுதி கோயில்கள் மூடல்
X
கொரோனா முன்னெச்சரிக்கையாக, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் மயிலாடுதுறை மாவட்ட கோயில்கள் மூடப்பட்டுள்ளன.

தமிழக அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரத்தில் கடைசி 3 நாட்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல தடைவிதித்துள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவிலில், நித்திய பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன. பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

அவ்வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கோயில்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில், பரிமள ரெங்கநாதர் ஆலயம், திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பெரிய கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை மூடப்பட்டு பக்தர்கள் இன்றி நித்தியபூஜை மட்டும் நடைபெறுவதால், கோவில்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி