மயிலாடுதுறை கோயில் பாதுகாவலர் கொலை வழக்கில் துப்பு: ரூ.10 ஆயிரம் பரிசு

மயிலாடுதுறை கோயில் பாதுகாவலர் கொலை  வழக்கில் துப்பு: ரூ.10 ஆயிரம் பரிசு
X
கொலை செய்யப்பட்ட காவலாளி சாமிநாதன்.
மயிலாடுதுறை கோயில் பாதுகாவலர் கொலை வழக்கில் துப்பு கொடுப்பவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்தனர்.

மயிலாடுதுறை படித்துறை விஸ்வநாதர் கோயிலில் கடந்த மே மாதம் 8-ஆம் தேதி மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது, கோயிலில் இரவுப் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாவலர் எஸ்.சாமிநாதன்(55) மர்ம நபரால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சாமிநாதன் மே 14-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இக்கொலை நடந்து 6 மாதங்கள் ஆகியும் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளி குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என மயிலாடுதுறை போலீசார் அறிவித்தனர்.

இதுதொடர்பாக மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளரை 8778347770 என்ற எண்ணிலும், மயிலாடுதுறை காவல் ஆய்வாளரை 9442003309 என்ற எண்ணிலும், காவல் உதவி ஆய்வாளரை 9498164710 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க மயிலாடுதுறை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!