நல்ல நாயகி அம்மன் கோவில் திருவிழா

நல்ல நாயகி அம்மன் கோவில்  திருவிழா
X
மயிலாடுதுறை அருகே ஸ்ரீ நல்ல நாயகி அம்மன் திருக்கோவிலில் நான்காம் ஆண்டு உற்சவ திருவிழா

மயிலாடுதுறை அருகே மணக்கடி கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ நல்ல நாயகி அம்மன் ஸ்ரீ பொறையான் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் நான்காம் ஆண்டு உற்சவத் திருவிழா வருகின்ற 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு தருமை ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். இந்த உற்சவ திருவிழா முன்னிட்டு உலக நன்மை வேண்டியும், ஸ்ரீ சர்வ மங்கள மகா சண்டி ஹோமம் நடைபெற உள்ளது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!