கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோயில் குடிமனைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்

கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோயில் குடிமனைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்
X

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கோயில் குடிமனைவாழ் மக்கள். 

அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரியும், குடிமனை விற்பனை யில் மோசடி செய்த நபர்மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரியும், குடிமனை விற்பனையில் மோசடி செய்த நபர்மீது, நடவடிக்கை எடுக்க கோரி, மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோயில் குடிமனைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே மாப்படுகை ஊராட்சியில், மாயூரநாதர் நகர், ஸ்ரீநாராயணபுரம், அவையாம்பாள்புரம், குடிமனைகளுக்கு சாலை, மின்சாரம், குடிநீர் வசதிகள் செய்துதரக்கோரியும், குடிமனை விற்பனை செய்தபோது, நிலநிதி மோசடி செய்த நபர் மீது கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நில மோசடி நிதியை மீட்டு மயிலாடுதுறை மாயூரநாதர் பெரிய கோயிலுக்கு அளித்திட வேண்டியும், கோயில் குடிமனைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாநில அமைப்பாளர் சாமிநடராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், குடியிருப்போர் நலச்சங்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!