சீர்காழியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் சீர்காழியில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு கூட்டம் மாநில தலைவரும்,ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருமான கு.தியாகராஜன் தலைமையில் சீர்காழியில் நடைபெற்றது.சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
தொடர்ந்து மாநில தலைவர் கு.தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு பள்ளிகளின் மீது அக்கறை கொண்டு செயல்படும் தமிழக முதல்வர், பள்ளிகல்வித்துறை அமைச்சர் இருவரின் கூட்டுமுயற்சியால் அரசு பள்ளியின் தரத்தை உயர்த்த பயனுள்ளதாக உள்ளது.வரலாற்று சிறப்புமிக்க 7.5சதவீதம் ஒதுக்கீட்டு தொழிற்கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்தி அரசு பள்ளி மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அரசு பள்ளியில் படித்தால் அரசு வேலையில் முன்னுரிமை என்ற அரசு ஆணையிட்டுள்ளது வரவேற்கதக்கது.
கடந்த ஆட்சியில் தமிழ் தெரியாதவர்கள் எல்லாம் அரசு வேலைக்கு செல்லக்கூடிய அவலநிலை இருந்ததை போக்கி அரசு வேலைக்கு தமிழ் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும் வேண்டும் எனவும் தமிழக அரசு வரலாற்று சிறப்பான ஆணைபிறப்பித்ததற்கு நன்றி. அரசு ஊழியர் இறந்தால் வழங்கப்படும் நிதியை ரூ.5லட்சமாக உயர்த்தி அவர்களது குடும்பத்திற்கு வழங்கும் வாக்குறுதியை அரசு நிறைவேற்றியுள்ளது. ஜாக்டோ ஜியோ போராட்டம் நடவடிக்கை ரத்து செய்து,அதனை பணிகாலமாக மாற்றப்படவேண்டும் என்ற தேர்தல் அறிக்கையின் போது வலியுறுத்திய கோரிக்கை தற்போது நிறைவேற்றி போராட்டகால ஊதியத்தை ஜாக்டோஜியோவினர் பெற்றிருக்கிறார்கள்.வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது . ஐந்தரைலட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் அரசு ஊழியர் கோரிக்கை மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டதை அமல்படுத்தவேண்டும்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற இந்த கோரிக்கை விரைவாக நிறைவேற்றப்படவேண்டும். பகுதி நேரத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் கடந்த 10ஆண்டு காலம் குறைந்த ஊதியத்தில் தங்களது வாழ்கையை தொலைத்துவிட்டார்கள். அவர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும்.அதேபோல் மாற்றுதிறன் மாணவர்களுக்கான ஆசிரியர் பயிற்றுனர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும்.
தி.மு.க ஆட்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் நியமிக்கப்பட்டு தற்போதுவரை பணிநிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 171 பேரை முதல்வர் பணிநிரந்தரம் செய்யவேண்டும். மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ள அரசுக்கு நன்றி. மாணவர் நலன் சார்ந்த கோரிக்கையான சத்துணவு திட்டத்தை 12ம் வகுப்பு வரை நீட்டிப்பு செய்து விரிவாக்கப்பட்ட கலைஞர் சத்துணவு திட்டம் என பெயர்சூட்டவேண்டும். தி.மு.க. ஆட்சியில் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருவதால் அரசு பள்ளியை நோக்கி அனைவரும் வரக்கூடிய காலம் விரைவில் வரும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu