மயிலாடுதுறை:தவ்ஹீத் ஜமாத் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

மயிலாடுதுறை:தவ்ஹீத் ஜமாத் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
X

மயிலாடுதுறையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.

மயிலாடுதுறையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு போதை விழிப்புணர்வு பற்றிய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தேசிய தவ்ஹீத் ஜமாத் கூட்டமைப்பின் சார்பில் போதை விழிப்புணர்வு ஒழிப்பு தொடர் பிரச்சாரம் தரங்கம்பாடி தாலுகா ஆயப்பாடி கடைவீதியில் மாநில செயலாளர் முகமது தலைமையில் நடைபெற்றது. விழிப்புணர்வு பரப்புரையில் கஞ்சா, அபின், ஹெராயின், போதை ஊசி, மது உள்ளிட்ட போதைகளுக்கு எதிராக மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்டோபர் 15 முதல் நவம்பர் 14 வரை மாநிலம் முழுவதும் பல கட்ட பரப்புரையில் மயிலாடுதுறை தவ்ஹீத் ஜமாத் மூலமாக நடைபெற்று வருகிறது.

இதில், இளம் விதவைகளையும், அனாதை குழந்தைகளையும் உருவாக்கும் போதையை நெருங்காதீர்கள், அறிவை மயக்கும் போதையை ஒழிப்போம், அறிவொளி மிக்க சமூகத்தை கட்டமைப்போம் உள்ளிட்ட விளம்பர பதாகைகளை கைகளில் ஏந்தி பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலும் இவ்விழிப்புணர்வு பிரச்சாரங்களை கிராமம் கிராமங்களாக கொண்டு சேர்க்கும் வகையில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மயிலாடுதுறை நகர செயலாளர் சம்சுதீன், தரங்கம்பாடி பேரூராட்சி செயலாளர் முகமது அலி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!