சீர்காழியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

சீர்காழி தாலுகா அலுவலகம் முன் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

சீர்காழி தாலுகா அலுவலகம் முன் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தி 600 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும், பெட்ரோல் டீசல் விலை குறைத்து மானிய விலையில் எரிவாயு சிலிண்டர் வழங்க வேண்டும்,நியாயவிலை கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும்,மகளிர் சுயஉதவிக்குழு மற்றும் நுண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.அனைவருக்கும் 400 சதுர அடியில் தரமான வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.'

Tags

Next Story