தமிழ் புத்தாண்டு: இந்த ஆண்டிற்கான பலன்களை பஞ்சாங்கத்தில் படித்தனர்

தமிழ் புத்தாண்டு: இந்த ஆண்டிற்கான பலன்களை  பஞ்சாங்கத்தில்  படித்தனர்
X

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ் புத்தாண்டான பிலவ ஆண்டு இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு ஆலயங்களில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் புகழ்பெற்ற பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உற்சவர் சீனிவாச பெருமாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருள அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து வேதியர்கள் பிலவ ஆண்டிற்கான பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்ட படி 12 ராசிகள் 27 நட்சத்திரங்களுக்கு ஆதாயங்கள் கந்தாயங்கள்,விரையம், லாபம், மழை அளவு பயிர் விளைச்சல் ஆகியவை குறித்து பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் இதில் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai future project