மயிலாடுதுறை தீப்பாய்ந்தாளம்மன் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

மயிலாடுதுறை தீப்பாய்ந்தாளம்மன் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
X

மயிலாடுதுறை தீப்பாய்ந்தாளம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை தீப்பாய்ந்தாளம்மன் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருவிழந்தூரில் தீப்பாய்ந்தாள் அம்மன் ஆலயம் உள்ளது. கணவன் இறந்த துக்கம் தாளாமல் உடன்கட்டை ஏறிய மனைவியின் நினைவாக கட்டப்பட்ட இவ்வாலயத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.

ஆலய வாசலில் 100க்கும் மேற்பட்டோர் மன்பானையில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர். தொடர்ந்து தமிழ் புத்தாண்டு சிறக்கவும், வாழ்வில் வளம் பெறவும், கொரோனா தொற்று முற்றிலுமாக நீங்கிடவும் வேண்டி பாலாபிஷேகம் செய்தனர். இதனை தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி