சீர்காழியில் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தின் சிறப்பு முகாம்

சீர்காழியில் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தின் சிறப்பு முகாம்
X

சிறப்பு முகாமில் பயனாளி ஒருவருக்கு பெயர் மாற்ற ஆணை வழங்கப்பட்டது.

சீர்காழியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சிறப்பு முகாம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் பெயர் மாற்றம் மற்றும் சர்வே எண் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பெயர் மாற்றம் செய்து சர்வே எண் மாற்றம் செய்து உடனடியாக வழங்கப்பட்டது. மேலும் தமிழக முதல்வரின் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்தோர் பெயர்களில் மாற்றம் செய்ய இந்த சிறப்பு முகாம் ஏதுவாக இருக்கும் விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை முகாமை மேற்பார்வையிட்டு மாற்றங்கள் செய்த விண்ணப்பங்களை சீர்காழி செயற்பொறியாளர் விசுவநாதன் பயனாளிகளுக்கு வழங்கினார்

Tags

Next Story
மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்