மயிலாடுதுறை அருகே ஓதவந்தான்குடி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பு முகாம்

மயிலாடுதுறை அருகே ஓதவந்தான்குடி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பு முகாம்
X
மயிலாடுதுறை அருகே ஓதவந்தான் குடி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பு முகாம் நடந்தது.
மயிலாடுதுறை அருகே ஓதவந்தான்குடி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஓதவந்தான்குடி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பு மற்றும் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது/ இதில் ஓதவந்தான்குடி, அகரவட்டாரம், மாதானம், ஆர்ப்பாக்கம், பச்சை பெருமாநல்லூர், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பசுமாடுகள். ஆடுகள். கோழி நாய் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. குறிப்பாக மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை கருவூட்டல் ஊசி மற்றும் மாடுகளுக்கான பரிசோதனை செய்யப்பட்டது.

ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மேலும் கால்நடை வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. சிறப்பாக மாடு வளர்ப்பில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. தற்போது பெய்த பருவம் தவறிய மழையால் கால்நடைகள் கோமாரி நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பாதிப்புக்கு ஆளாகி வரும் நிலையில் இப்பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாம் விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

ஓதவந்தான்குடி தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற முகாமில் கால்நடை மருத்துவர்கள் ராமபிரபா, மணிமொழி, சரவணன், கால்நடை ஆய்வாளர் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் என இருபதுக்கும் மேற்பட்ட அலுவலர்கள் முகாமில் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தொடர் சிகிச்சை அளித்தனர். மேலும் இந்த சிறப்பு முகாமில் மீன்வளத் துறை சார்பாக விவசாயிகளுக்கு மீன் இறால் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

Tags

Next Story