சன்லைட் பர்னிங்வுட் ஆர்ட் மூலம் டெஸ்லா நிறுவன லோகோ வரைந்தவருக்கு பாராட்டு

சன்லைட் பர்னிங்வுட் ஆர்ட் மூலம் டெஸ்லா நிறுவன லோகோ வரைந்தவருக்கு பாராட்டு
X
சன்லைட் பர்னிங்வுட் ஆர்ட் மூலம் டெஸ்லா நிறுவன லோகோ வரைந்தவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தோப்புத்தெருவைச் சேர்ந்தவர் ராமு மகன் விக்னேஷ். இந்தியாவிலேயே முதன்முதலாக சன்லைட் பர்னிங்வுட் ஆர்ட் மூலம் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்களின் புகைப்படங்களை வரைந்து புகழ் பெற்றவர்.இந்த நிலையில் சூரிய ஒளிக்கதிர்களை உருப்பெருக்கியால் குவித்து மரப்பலகையில் நெருப்பை உருவாக்கி சன்லைட் பர்னிங்வுட் ஆர்ட் மூலம் இவர் வரைந்த டெஸ்லா நிறுவனத்தின் லோகோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இவரின் திறமையை பாராட்டி டெஸ்லா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது வீடியோவை அந்நிறுவனம் பகிர்ந்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. தற்போது இந்த வீடியோ பல லட்சம் பார்வையாளர்களின் லைக்குகளை பெற்று வருகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!