தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் சம்பள நிலுவை வழங்க கோரி தர்ணா

தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் சம்பள நிலுவை வழங்க கோரி தர்ணா
X

 27  மாத சம்பள நிலுவை தொகை வழங்க கோரி தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் 27 மாத ஊதிய நிலுவை தொகை வழங்க கோரி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 5 அரவை பருவங்களாக இயக்கப்படாமல் உள்ளது. இந்த ஆலையில் பணிபுரிந்தவர்களை கடந்த 2017-ஆம் ஆண்டு பிற கூட்டுறவு ஆலைகளுக்கு செல்ல ஆலை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் 50 சதவீத ஊழியர்கள் மட்டும் பிற ஆலைகளுக்கு சென்ற நிலையில், மீதமுள்ள 50 சதவீத ஊழியர்கள் இந்த ஆலையில் தற்போதும் பணி செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கி தற்போது வரை ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் இந்த ஆலையில் பணி செய்து ஓய்வு பெற்றவர்களுக்கு எந்தவித பணப் பயனும், ஓய்வு ஊதியமும் வழங்கப்படவில்லை. ஆலை ஊழியர்க்கு சம்பளம் வழங்காததை கண்டித்து ஆலைத் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

5வது நாளாக போராட்டம் தொடர்ந்து இரவு பகலாக நீடித்து வருகிறது. இருபத்தி ஏழு மாத கால சம்பளம் வழங்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!