சர்க்கரை ஆலையில் 27 மாதச்சம்பளம் நிலுவை: ஊழியர்கள் போராட்டம்

சர்க்கரை ஆலையில் 27 மாதச்சம்பளம்  நிலுவை: ஊழியர்கள் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள்.

தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 27 மாத நிலுவை சம்பளத்தை வழங்ககோரி 11வது நாளாக, ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தலைஞாயிறு பகுதியில் என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2017ம் ஆண்டு அரவை நிறுத்தப்பட்டது. சர்க்கரை ஆலையில் உள்ள ஊழியர்கள் வேறு ஆலைகளுக்கு அனுப்பப்பட்டனர். மீதமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு, கடந்த 27 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

சம்பள நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, ஆலையினுள் கடந்த 25 ஆம் தேதி காத்திருப்பு போராட்டத்தை ஊழியர்கள் தொடங்கினர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், போராட்டம் தொடர்கிறது.

ஊழியர்களுக்கான ஊதியத்தை உடனடியாக வழங்க கோரியும், மூடப்பட்டுள்ள ஆலையை தமிழக அரசு மீண்டும் திறக்க வேண்டும் , ஓய்வு பெற்ற ஊழியர்களின் அனைத்து பண பயன்களையும் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளர்கள் 11வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சி காய்ச்சி குடித்து காத்திருப்பு போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story