மயிலாடுதுறையில் திடீர் மழை; கலக்கத்தில் நெல் விவசாயிகள்

மயிலாடுதுறையில்  திடீர் மழை;  கலக்கத்தில் நெல்  விவசாயிகள்
X

மயிலாடுதுறையில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் கலக்கம்

நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக அடுக்கி வைத்துள்ள விவசாயிகளுக்கு இந்த பெய்த மழை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் காலைமுதல் திடீர் மழை பெய்ததால்; அறுவடைக்கு தயாராக உள்ள விவசாயிகளும் அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்துள்ள விவசாயிகளும் கலக்கமடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை தொடங்கி திடீர் மழை பெய்தது. மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோயில், மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை லேசான மழையாக தொடங்கி தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. காலை 7 மணிக்கு பின்னரே பலத்த மழை தொடங்கியதால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. சில இடங்களில் சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், பலத்த மழை தொடர்ந்தால் பயிர்கள் சாய்ந்து விடும் அபாயம் உள்ளது. இதேபோல பல்வேறு இடங்களில் அறுவடை செய்யப்பட்ட சம்பா நெல்மணிகளை விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக அடுக்கி வைத்துள்ளனர். விவசாயிகளுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு மணிநேரத்தை கடந்து பெய்த மழை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai based agriculture in india