சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊரக நலப்பணிகள் இயக்குனர் திடீர் ஆய்வு.

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊரக நலப்பணிகள் இயக்குனர் திடீர் ஆய்வு.
X

சீர்காழி அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இயக்குனர் டாக்டர் குருநாதன் திடீர் ஆய்வு செய்தார்.

சீர்காழி அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் குருநாதன் திடீர் ஆய்வு நடத்தினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புறநோயாளிகளாகவும், 200க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்/

இந்நிலையில் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு இன்று திடீரென வந்த மாநில மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் குருநாதன் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை பார்வையிட்டார். பின்னர் சி.டி. ஸ்கேன் அமைக்கப்படும் இடம் மற்றும் மருத்துவமனையின் பொது சுகாதாரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

அப்போது அவர் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து டாக்டர்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து அறிவுரை வழங்கினார். முன்னதாக அவர் மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளையும் ஆய்வு செய்தார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!