வெற்றி தோல்வி ஒரு இயக்கத்தின் போக்கை மாற்றி விட முடியாது : கே.எஸ்.அழகிரி
சீர்காழியை அடுத்த கொள்ளிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி.
ஜனநாயகத்தின் வெற்றியோ தோல்வியோ ஒரு இயக்கத்தின் போக்கை மாற்றி விட முடியாது இந்த பின்னடைவின் மூலமாக மேலும் எங்களை எப்படி வழி நடத்திச் செல்ல வேண்டும் என்பதை அறிந்து கொண்டோம் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த கொள்ளிடத்தில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: ஜனநாயகத்தின் வெற்றியோ தோல்வியோ ஒரு நாட்டினுடைய அல்லது ஒரு இயக்கத்தினுடைய போக்கை மாற்றி விட முடியாது.
100 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியானது பல முறை பின்னடைவை சந்தித்துள்ளது. ஏராளமான முறை வெற்றி பெற்றிருக்கிறது. இந்த பின்னடைவின் மூலமாக மேலும் எங்களை நாங்கள் எப்படி வழி நடத்திச் செல்ல வேண்டும் என்பதை அறிந்து கொண்டுள்ளோம். இதில் ஏதும் சிரமம் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. திருமாவளவன் இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து நின்று செயலாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார் அது வரவேற்க வேண்டிய கருத்து. ஏற்கெனவே மதச்சார்பற்ற கூட்டணி என்பது இந்தியாவில் இருக்கின்ற எல்லா இடதுசாரிகளும் முற்போக்காளர்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒன்று திரட்டிதான் செய்து வருகிறோம். எனவே அந்த கருத்து ஏற்புடையதே. நிச்சயமாக அது வெற்றி பெறும் என்றார்.
சென்னையில் பட்டியலினத்தவர் இடத்தை கிறிஸ்தவர்கள் ஆக்கிரமித்து இருப்பதாக அர்ஜுன் சம்பத் கூறியது பற்றி கேள்விக்கு, எல்லோரையும் சோதனை செய்து பார்ப்பது தவறான அணுகுமுறை. அவர்களுக்கு அரசின் சான்றிதழ் பட்டியலினத்தவர் என்று உள்ளது. அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது. அதனை ஏற்காமல் அவர்கள் எந்தப் பிரிவை சார்ந்தவர்கள் என சோதித்து பார்ப்பது ஒரு தவறான அணுகுமுறை. அமெரிக்க நாராயணன் நீக்கம் குறித்து கேட்ட கேள்விக்கு..அவருடைய கருத்து குறித்து விளக்கம் கேட்டேன் அவர் நீக்கம் குறித்த அந்த நோட்டீஸ் சமூக வளைதளத்தில் பரவி உள்ளதே தவிர நான் சமூக வளைதளத்தில் பகிரவில்லை என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu