சீர்காழி அருகே லவ்பேர்ட்ஸ் பறவைகளை விழுங்கிய விஷப்பாம்பால் பரபரப்பு
விஷப்பாம்மை பிடித்த பாம்பு பிடி வீரர் பாண்டியன்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கன்னியாக்குடி கிராமத்தில் வசிப்பவர் பாபு. விவசாயியான பாபு வீட்டின் பின்புறம் கூண்டுகள் அமைத்து கோழி மற்றும் லவ்பேர்ட்ஸ் வளர்த்து வருகிறார்.இந்நிலையில் நள்ளிரவு லவ்பேர்ஸ் வளர்க்கப்பட்ட கூண்டுக்குள் கொடூர விஷம் கொண்ட. 6 அடி நீளம் கொண்ட கோதுமை நாகம் உள்ளே புகுந்துள்ளது.
பின்னர் கூண்டில் இருந்த இரண்டு பறவைகளையும் அடுத்தடுத்து முழுங்கிய நிலையில் கூண்டை விட்டு வெளியேற வழியில்லாமல் கூண்டிலேயே சிக்கியது.காலையில் பறவைகள் சப்தம் இல்லாததை கண்ட பாபு கூண்டை பார்த்த போதுதான் பறவைகளை விழுங்கிய நிலையில் நாகப்பாம்பு கூண்டில் சிக்கியது தெரியவந்தது இனையடுத்து பாம்பு பிடி வீரரான பாம்பு பாண்டியனுக்கு தகவல் கொடுத்தனர்.விரைந்து வந்த பாம்பு பாண்டியன் கொடூர விஷம் கொண்ட கோதுமை நாகத்தை லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்ததுடன் மக்கள் நடமாட்டமற்ற வனபகுதியில் பாதுகாப்பாக விட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu