மயிலாடுதுறை அருகே இரட்டைகுளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் தூர்நாற்றம்

மயிலாடுதுறை அருகே இரட்டைகுளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் தூர்நாற்றம்
X

இரட்டை குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்.

மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டையில் உள்ள இரட்டைகுளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் தூர்நாற்றம் வீசி வருகிறது.

மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் ஊராட்சி பல்லவராயன்பேட்டை மெயின்ரோட்டில் இரட்டைகுளம் உள்ளது. இந்த குளத்தினை சாக்கியம்பள்ளி கிராமத்தை சேர்ந்த கிராம நாட்டாமை பஞ்சாயத்தால் கூறைநாட்டை சேர்ந்த தனியார் ஒருவரிடம் மீன்வளர்ப்பதற்கு குத்தகைக்கு விட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக குளத்தில் அதிக அளவில் மீன்கள் செத்து மிதந்து கரை ஒதுங்கத் தொடங்கியுள்ளது. ஒன்று இரண்டு மீன்கள் ஒதுக்கியநிலையில் நேற்றும் இன்றும் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து கரை ஒதுங்கி வருகிறது.

அதிக அளவில் தூர்நாற்றம் வீசியதையடுத்து, அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து ஊராட்சி தலைவர் சேட்டு மற்றும் சாக்கியம்பள்ளி கிராம நாட்டான்மை பஞ்சாயத்தால் குளத்தில் இறந்துகிடக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டுமென்று மீன்குத்தகை எடுத்தவருக்கு தகவல் கொடுத்தனர்.

குளத்தில் விஷம் வைத்து மீன்கள் கொள்ளப்பட்டதா? அல்லது குளத்தில் தண்ணீரின் தன்மை மாறியதால் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து குளத்தில் எஞ்சி இருக்கும் மீன்களுக்கு நோய்வாய்ப்பட்டிருந்தால் அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளத்தில் இறந்த மீன்களை குத்தகைதாரர் அப்புறப்படுத்தி வருகிறார். ஆனால், இது குறித்து அவர் புகார் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Tags

Next Story
ai solutions for small business