மயிலாடுதுறை ஸ்ரீமாயூரநாதர் ஆலயத்தில் மகாசிவராத்திரி நாட்டியாஞ்சலி
மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் 16-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா கடந்த 26ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சென்னை நாட்டியக்கூடம் குழுவினர், ஸ்ரீ ந்ருத்யாலயா அகாடமி குழுவினர், மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் நுண்கலை பயிற்சியக குழுவினர், சென்னை லட்சுமி கலாகேந்தரம் குழுவினர், ந்ருத்யாப்யாசா அகாடமி ஆஃப் பைன் ஆர்ட்ஸ் குழுவினர், நாட்டியதிருத் அகாடமி ஆஃப் பரதநாட்டியம் ஆகிய குழுவினரின் பரதநாட்டியம் மற்றும் நாட்டிய நாடகம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.
இதில் மயிலை சப்தஸ்வரங்கள் நுண்கலை பயிற்சியக மாணவிகள் 50 நிமிடங்கள் நடத்திய மகாபாரத பரதநாட்டிய நாடக காவியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இரண்டாம் நாள் மயூரநாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்ற கலைஞர்களை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் ஏ.ஆர்.சி விஸ்வநாதன், தலைவர் பரணிதரன், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். இதில் கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu