குத்தாலம் அருகே ஸ்ரீகண்டபுரம் மகாமாரியம்மன்கோவில் தீ மிதி திருவிழா

குத்தாலம் அருகே ஸ்ரீகண்டபுரம் மகாமாரியம்மன்கோவில் தீ மிதி திருவிழா
X

தீ மிதி விழாவில் அலகு குத்தி வந்தார் ஒரு பக்தர்.

குத்தாலம் அருகே ஸ்ரீகண்டபுரம் மகாமாரியம்மன்கோவில் தீ மிதி திருவிழா மிக சிறப்பாக நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஸ்ரீகண்டபுரம் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 18ஆம் தேதி திருவிழா தொடங்கப்பட்டு அதனைத் தொடர்ந்து 10நாட்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

நேற்று தீமிதி திருவிழாவானது நடந்தது.இதில் பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். முன்னதாக கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக செண்டை மேள தாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் கரகம்,அலகு காவடிகளுடன் சுவாமி வீதி உலா நடந்தது. இதில் 1000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ கண்டபுரம் கிராம நாட்டாமைகள், கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story