விளையாட்டு மன அழுத்தத்தை போக்கும்: முன்னாள் நீதியரசர் பேச்சு..!
விளையாட்டு மன அழுத்தத்தை போக்கும் உன்னத மருந்து என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் பேசினார்.
மயிலாடுதுறை :
மாணவ மாணவிகள் படிப்பில் முதல் மதிப்பெண் பெற்றால் மட்டும் போதாது விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என ஏவிசி தன்னாட்சி கல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் வலியுறுத்தினார்.
மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசரும் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியுமான கே. வெங்கட்ராமன் கலந்துகொண்டு ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைத்து ஆண்டு விளையாட்டு விழாவை தொடங்கிவைத்து பேசியதாவது:-
ஒருவரின் வாழ்வில் கல்வி எந்த அளவுக்கு முக்கியமானதோ அதே அளவிற்கு விளையாட்டும் அவசியமான ஒன்று. மாணவ மாணவிகளாகிய நீங்கள் படிப்பில் முதல் மதிப்பெண் பெறுவது மட்டும் போதாது விளையாட்டிலும் பல்வேறு சாதனைகளை செய்ய வேண்டும் இதனால் மன அழுத்தம், கோபம் ஆகியவை குறைந்து மகிழ்ச்சியான வாழ்வை பெற முடியும் என அறிவுரை கூறினார்.
பின்னர் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.நாகராஜன், துணை முதல்வர் எம். மதிவாணன், தேர்வு நெறியாளர் மேஜர் ஜி. ரவிசெல்வம், டீன் எஸ். மயில்வாகணன், பொறியியல் கல்லூரி இயக்குனர் எம். செந்தில்முருகன், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
உடற்கல்வி இயக்குனர் டாக்டர் ஜே. ராஜ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார் ஆங்கிலத்துறை பேராசிரியை எம்.கீதா நன்றி கூறினார் இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu