மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு ஒஎன்ஜிசி சார்பில் விளையாட்டு உபகரணங்கள்

மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு ஒஎன்ஜிசி சார்பில் விளையாட்டு உபகரணங்கள்
X

மாணவர்களுக்கு விளையாட்டு உபகாரணகள் வழங்கிய எம்எல்ஏ.

மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு ஒஎன்ஜிசி சார்பில் கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்களை எம்எல்ஏ ராஜகுமார் ஆகியோர் வழங்கினர்.

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரூ.1.70 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் வகுப்பறை பயன்பாட்டிற்காக எல்இடி புரஜெக்டர், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மேசை, நாற்காலிகள் ஆகியன ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார், ஒஎன்ஜிசி காவிரி அசெட் மேலாளர்கள் அனுராக், மாறன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, புரஜெக்டர், விளையாட்டு உபகரணங்கள், மேசை, நாற்காலிகளை பள்ளி தலைமை ஆசிரியரிர் தாமரைச்செல்வனிடம் வழங்கினர். இதில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஓஎன்ஜிசி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!