மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்தில் கொரோனா வைரஸ் தொற்று நீங்க ஹோமம்
கொரோனா தொற்று நீங்க வேண்டி ஸ்ரீ மஹா பாசுபதாஸ்த்ர ஹோமம் நடைபெற்றது.
வதான்யேஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டியும் கொரோனா வைரஸ் தொற்று நீங்க வேண்டியும் ஸ்ரீ மஹா பாசுபதாஸ்த்ர ஹோமம் நடைபெற்றது. தருமபுர ஆதீன மடாதிபதி உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறையில் சைவ மடங்களில் ஒன்றான தர்மபுர ஆதீனத்தின் கீழ் 27 சிவாலயங்கள் உள்ளிட்ட பல கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஆதீனத்திற்கு உட்பட்ட சிவாலயங்களில் உலக நன்மை வேண்டியும் கொரோனா வைரஸ் தொற்று குறைய வேண்டி சிறப்பு ஹோமம் நடத்த தருமபுர ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அறிவுறுத்தினார்.
அந்தவகையில் மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீ ஞானாம்பிகை உடனாகிய வதான்யேஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டியும் கொரோனா வைரஸ் குறைய வேண்டியும் ஸ்ரீ மகா பாசுபதாஸ்த்ர ஹோமம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத யாகம் வளர்க்கப்பட்டு அஸ்திர தேவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு ஹோமத்தில்; குறைந்த அளவிலான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu