மயிலாடுதுறையில் ஆடவர்- மகளிருக்கான தென்னிந்திய அளவிலான கபடி போட்டி
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை அடுத்த இலுப்பூர் சங்கரன்பந்தலில் நடைபெறும் தென்னிந்திய ்அளவிலான கபடி போட்டி
மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 நாட்கள் நடைபெறும் ஆடவர்- மகளிருக்கான தென்னிந்திய அளவிலான மின்னொளி கபாடி போட்டி துவக்கம். தமிழ்நாடு, கர்நாடகா பெங்களுரூ ஆந்திரா கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரபல அணிகள் பங்கேற்பு. முதல் நாள் போட்டிகளை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை அடுத்த இலுப்பூர் சங்கரன்பந்தலில் 3 நாட்கள் நடைபெறும் தென்னிந்திய அளவிலான ஆடவர் - மகளிருக்கான மின்னொளி கபாடி போட்டி இரவு துவங்கியது. இலுப்பூர்-சங்கரன்பந்தல் விளையாட்டு கழகம் சார்பில் நடத்தப்படும் இப்போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பெங்களூரூ உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பிரபல நிறுவன அணிகள் துணை ராணுவஅணி, சென்னை ஐசிஎஃப் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபல அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.
ரப்பர் ஆடுகளத்தில் நடைபெறும் போட்டிகள் நாக்அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் நடைபெறுகிறது. போட்டியில் 60க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்கிறது. 25 நடுவர்கள் பங்கேற்று போட்டிகளை நடத்துகின்றனர். ஆடவர்-மகளிர் முதல் போட்டியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன்; மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் துவங்கி வைத்தனர். ஆடவர் பிரிவில் தூத்துக்குடி-திருப்பூர் அணியும் மகளிர் பிரிவில் கேரளா -ரெட் ஸ்டார் அணிகளும் மோதின. புரபரப்பாக நடைபெற்ற போட்டிகளை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ரூபாய் 1 லட்சம் முதல் 20 ஆயிரம் ருபாய் வரை பரிசுதொகை வழங்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu