சீர்காழி சட்டைநாதர் கோவில் திருப்பணிக்கான பாலாலயம் தொடங்கியது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இத்தளத்தில் சிவபெருமான் லிங்க வடிவமாகவும்,பார்வதி சமேத சிவபெருமானாகவும்,அர்த்தநாரீஸ்வரராகவும் மூன்று நிலைகளில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். ஞானசம்பந்தர் அவதரித்து ஞானம் பெற்ற இத்தலத்தில் திருப்பணிகள் தொடங்க திட்டமிட்டு இன்று பாலாலயம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனையை தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு சுவாமி,அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனையடுத்து சட்டைநாதர்,பிரம்மபுரீஸ்வரர் உள்ளிட்ட 31 சுவாமி அம்பாளுக்கு சோமாஸ்கந்தர் சன்னதியில் பாலாலயம் செய்யப்பட்டது. தருமையாதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த பாலத்தில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறை படி பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் சிப்பந்திகள் உபயதாரர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu