சீர்காழி நெல் திருவிழா: விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கல்

சீர்காழி நெல் திருவிழா: விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கல்
X

சீர்காழி நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற நெல் திருவிழா

அங்கன்வாடி,சத்துணவிலும் மாணவர்களுக்கு இயற்கை முறை விவசாயத்தில் விளைவித்த அரிசியை பயன்படுத்த கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற, நெல் திருவிழாவில் விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கபட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பாக நெல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். மறைந்த நெல் ஜெயராமன் தொடங்கி நடத்தி வந்த நெல் திருவிழாவின் 7 ஆம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. வழக்கமாக இரண்டு தினங்கள் நடைபெறும் விழா கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ஒருநாள் மட்டுமே நடைபெற்றது. தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில், நல்லசோறு ராஜமுருகன், தஞ்சை கோ.சித்தர், மரபு விவசாயி காரைக்கால் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பாரம்பரிய நெல்லின் நன்மைகள் மற்றும் மரபு வழி விவசாயம் குறித்து கருத்துரையாற்றினர்.

அதனை தொடர்ந்து பாரம்பரிய நெல் விதை ரகங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.விழாவில்70 க்கும் மேற்பட்ட பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிபடுத்தபட்டுருந்தன.கடந்த ஆண்டு நெல்விதைகள் பெற்ற விவசாயிகள் அவற்றின் இரண்டு மடங்கு விதை நெல்லை திருப்பி வழங்கினர். மேலும், முன்னோடி அங்கன்வாடி, சத்துணவிலும் மாணவர்களுக்கு இயற்கை முறை விவசாயத்தில் விளைவித்த, அரிசியை பயன்படுத்த வேண்டுமென நலம் பாரம்பரிய அறக்கட்டளை நிறுவனர் சீர்காழி சுதாகர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இயற்கை விவசாயிகள்,சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil