திமுக வேட்பாளர்களை ஆதரித்து சீர்காழி எம்எல்ஏ- பன்னீர்செல்வம் பிரசாரம்

திமுக வேட்பாளர்களை ஆதரித்து சீர்காழி எம்எல்ஏ-  பன்னீர்செல்வம்  பிரசாரம்
X

சீர்காழியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார்

பிரசாரத்தின்போது தனது வீட்டில் சுவர் இடிந்து உள்ளதை காட்டிய மூதாட்டிக்கு வீடு கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்தார்

சீர்காழியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார்.

நடக்க இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் திமுக சார்பில் 18வது வார்டில் போட்டியிடும் திமுக நகர செயலாளர் மா.சுப்பராயனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார். பொதுமக்கள் பொன்னாடை அணிவித்து வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்பொழுது தன் வீட்டில் சுவர் இடிந்து உள்ளதை காட்டிய மூதாட்டிக்கு வீடு கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்தார் பன்னீர்செல்வம் தெரு, சட்டநாதர் காலனி, உள்ளிட்ட பதினெட்டாவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!