சீர்காழியில் ரிலையன்ஸ் அறக்கட்டளை தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கல்

சீர்காழியில் ரிலையன்ஸ் அறக்கட்டளை தூய்மைப் பணியாளர்களுக்கு  நிவாரணம் வழங்கல்
X

சீர்காழி நகராட்சியில் ரிலையன்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

சீர்காழி நகராட்சியில் ரிலையன்ஸ் அறக்கட்டளை தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உலர் உணவு பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் சென்ட்ரல் அரிமா சங்கம் இணைந்து சீர்காழி நகராட்சியில் பணியாற்றும் 100 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு உலர் உணவுப்பொருட்களையும் மளிகை பொருட்களையும் வழங்கினர்.

நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1லட்சத்து 10ஆயிரம் மதிப்பிலான உலர் உணவு பொருட்களை தூய்மை பணியாளர்கள் 135 நபர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் முன்களபணியாளர்களுக்கு தேவையான கிருமிநாசினிகளும் மொத்தமாக நகராட்சி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்