சீர்காழி அருகே விவசாயி இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்

சீர்காழி அருகே விவசாயி இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்
X
சீர்காழி அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
சீர்காழி அருகே விவசாயி இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அற்புதராஜ் (வயது30.). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக அற்புதராஜ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி மணியரசி அவரை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அற்புதராஜ் உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உடலை உறவினர்கள் அற்புதராஜ் இறப்புக்கு மனைவி மணியரசி மற்றும் மாமியாரே காரணம் என குற்றம் சாட்டி அவர்கள் இருவரையும் கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டு உள்ள கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!