சீர்காழி பஸ் நிலையத்தில் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்
சீர்காழி பஸ் நிலையத்தில் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் இன்று மயிலாடுதுறை எஸ்.பி. சுகுணா சிங் உத்தரவின்படி பேருந்திற்காக காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் சைபர் கிரைம் போலீசார் இணையவழி மூலம்நடைபெறும் மோசடி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குழந்தைகள் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதை பெற்றோர் கண்காணிக்கவும் அறிவுறுத்தினர்.
இணையத்தின் வாயிலாகவோ செல்போன் வாயிலாகவோ உங்களது சுய விவரங்களை யாரேனும் கேட்டால் பகிர வேண்டாம், முகம் தெரியாத நபர்களை இணையத்தில் நண்பனாக்கிக் கொள்ள வேண்டாம், உங்களது ஏ.டி.எம். கார்டு ,ஆதார் கார்ட், ஓ.டி.பி. எண்களை யாரிடமும் பகிர வேண்டாம், அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து வரும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகளை திறந்து பார்க்க வேண்டாம்.
அதில் உங்கள் தகவல்களை திருடும் வைரஸ் அடங்கியிருக்கலாம்,பொது மக்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டால் உடனடியாக 1930 என்ற உதவி எண்ணை அழைத்து சைபர் கிரைம் போலீசார் தகவல் கொள்ளவும் பொதுமக்களிடம் போலீசார் கேட்டுக்கொண்டனர். இதுமட்டுமின்று ஆன்லைன் மோசடியில் இருந்து பொது மக்கள் எவ்வாறு தங்களை காத்துக் கொள்ளலாம் என்பது அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் போலீசார் பொது மக்களுக்கு வழங்கினர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu