சீர்காழி: அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சீர்காழி: அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
X
சீர்காழி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தில்லைவிடங்கன் பகுதியை சேர்ந்தவர் அபிமணி(வயது21.).இவர் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.இயற்கைஉபாதை கழிப்பதற்கு வீட்டின் அருகேயுள்ள வயல் பகுதிக்கு சென்றுள்ளார்.எதிர்பாராத விதமாக அங்கு அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை மிதித்து தூக்கி வீசப்பட்டார்.இவ்விபத்தில் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த அபிமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு 108 வாகனம் மூலம் கொண்டு சென்றனர். அபிமணியை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன், மின் வாரிய பொறியாளர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!