சீர்காழி அருகே குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

சீர்காழி அருகே குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம்: அமைச்சர் மெய்யநாதன்  தொடக்கம்
X
தமிழகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளில் 25 ஆயிரம் இடங்களில் குறுங்காடுகள் வளர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சீர்காழி அருகே நிம்மேலி கிராமத்தில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தை சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பாக குறுங்காடுகள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் மூன்று கிராமங்களில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. நிம்மேலி கிராமத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக சுற்றுசூழல் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளில் 25 ஆயிரம் இடங்களில் குறுங்காடுகள் வளர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் குறுங்காடுகள் வளர்ப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக குறுங் காடுகளை வளர்க்க முன் வருபவர்களுக்கு இலவசமாக அரசின் சார்பில் மரக்கன்றுகள் உட்பட அனைத்து வசதிகளி வழங்கப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றார் அமைச்சர் மெய்யநாதன். இவ்விழாவில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் தலைவர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil