மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 2 அதிவேக ஆக்சிஜன் செலுத்தும் கருவி

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 2 அதிவேக ஆக்சிஜன் செலுத்தும் கருவி
X
மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு 2 அதிவேக ஆக்சிஜன் செலுத்தும் கருவியை சேவாபாரதி மற்றும் கலங்கரை சேவா அறக்கட்டளை வழங்கியது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேவா பாரதி மற்றும் கலங்கரை சேவா அறக்கட்டளை சார்பில் கொரோனா தொற்றால் சிரமப்படும் நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் 4.5 லட்சம் மதிப்பில் தீவிர அதிவேக ஆக்சிஜன் செலுத்தும் கருவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் அதிவேக ஆக்சிஜன் செலுத்தும் 2 கருவிகளை சேவா பாரதி மாநில சுற்றுச்சூழல் பொறுப்பாளர் மதிவாணன், சேவாபாரதி அமைப்பு பாலமுரளி, பிரகாஷ், பாஜக நிர்வாகி நாஞ்சில்பாலு ஆகியோர் ஒப்படைத்தனர். தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் லலிதா கூறுகையில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் போன்ற அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்