செப். 1-இல் பள்ளிகள் திறப்பு: வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

செப். 1-இல் பள்ளிகள் திறப்பு: வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
X

செம்பனார்கோவில் கலைமகள் மெட்ரிகுலேசன் பள்ளி வகுப்பறையில் நடைபெற்ற கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் 

9 முதல் 12-ஆம் வகுப்பு வரை 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது.

தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு:- வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளித்து சுகாதாரப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலையை கட்டுப்படுத்துவதற்காக அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. தற்போது தொற்றின் வேகம் குறைந்துவரும் நிலையில், படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், மூடப்பட்ட பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதையொட்டி, சுகாதார நடடிவக்கைகளை தனியார் பள்ளிகள் மேற்கொண்டு வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தனியார் பள்ளியில் (கலைமகள் மெட்ரிகுலேசன் பள்ளி) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூய்மை பணிகள் நடைபெற்றது. வகுப்பறை, பள்ளி வளாகங்கள் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும், ஜேசிபி வாகனம் கொண்டு புதர் மண்டியிருந்த பள்ளி விளையாட்டு மைதானத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளிகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது