செம்பனார்கோயிலில் தி.மு.க. எம்.எல்.ஏ. வீடு, வீடாக வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பனார்கோயில் ஒன்றியம் காட்டுச்சேரி, சந்திராபாடி, திருக்களாச்சேரி உள்ளிட்ட ஊராட்சிகளின் வார்டு எண் 30 ஒன்றியக்குழு வேட்பாளர் செ.செல்வத்தை ஆதரித்து பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் காட்டுச்சேரி ஊராட்சியில் வீடு, வீடாக சென்று வாக்குகள் சேகரித்தார்.
நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், தரங்கை பேரூர் தி.மு.க. செயலாளர் வெற்றிவேல், ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயலட்சுமி சாமிநாதன், பைலட், ரங்கராஜன், லெனின் மேசாக், ராஜா மற்றும் காட்டுச்சேரி ஊராட்சி தி.மு.க. கிளைச் செயலாளர்கள், தி.மு.க. உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu