செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
X

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் விடப்பட்டது.

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் விடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் கிழமை நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் அதிகபட்ச விலை குவிண்டால் ஒன்றுக்கு எழுபத்து ஏழு அறுபத்து ஒன்பதுக்கும் சராசரி 70.40-க்கும் போனது மொத்தம் விவசாயிகள், வியாபாரிகள் 498 பேர் குவிந்தார்கள் 950 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது.

இது குறித்து நாகை விற்பனை குழு செயலாளர் மற்றும் தனி அலுவலர் கூறியதாவது

விவசாயிகள் தங்களின் விளை பொருட்களான நெல், பயறு, உளுந்து, நிலகடலை, முந்திரி, துவரை, தேங்காய், மிளகாய், கரும்பு வெல்லம் போன்ற விளை பொருட்களை எடுத்து வந்து பயன் அடைய வேண்டும். மேலும் விளை பொருட்களை நாகை விற்பனை குழு கீழ் இயங்கும் குத்தாலம், மயிலாடுதுறை, செம்பனார்கோவில், சீர்காழி, வேதாரண்யம், கீழ்வேளூர், திருபூண்டி, மற்றும் நாகப்பட்டினம் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் உள்ள கிடங்குகளில் இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெற்று அதிக விலை கிடைக்கும் நேரங்களில் விற்று பயன் அடையலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!