செம்பனார் கோவில், குத்தாலம் ஒன்றிய இடைத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றி

செம்பனார் கோவில், குத்தாலம் ஒன்றிய இடைத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றி
X

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் தி.மு.க.வினர் உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில், குத்தாலம் ஒன்றிய இடைத்தேர்தல்களில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பனார்கோவில் ஒன்றியம் காட்டுச்சேரி 30 வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செ.செல்வம் 791 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 2249 வாக்குகள் பெற்றிருந்தார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சபரிநாதன் 1458 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பெற்றார்.

இதேபோன்று குத்தாலம் ஒன்றிய 15-ஆவது வார்டு ஒன்றியக் குழு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ராக்கெட் ரமேஷ் 2019 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மணிகண்டன் 992 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளரை விட 1207 வாக்கு வித்தியாசத்தில் ராக்கெட் ரமேஷ் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வம், ராக்கெட் ரமேஷ் ஆகியோருக்கு வெற்றி சான்றிதழ் தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!