மயிலாடுதுறை: வீட்டில் மது விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

மயிலாடுதுறை:  வீட்டில் மது விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
X

வீட்டில் மதுபானம் விற்பது தொடர்பான வீடியோ காட்சி.

மயிலாடுதுறையில் வீட்டில் மது விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது.

மயிலாடுதுறை அருகே வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் காளி ஊராட்சி அக்ரகாரம் தெருவில் பல மாதங்களாக மது விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து அந்த தெருவில் வசிக்கக்கூடிய ராஜேந்திரன் , சாவித்திரி தம்பதியினர் வீட்டில் சட்டவிரோதமாக மதுவினை பதுக்கி வைத்து அப்பகுதியில் உள்ள இளைஞர்களிடம் விற்பனை செய்யும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அப்பகுதியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் படுஜோராக மது விற்பனை நடைபெறுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். காலை முதல் இரவு வரை அனைத்து நேரங்களிலும் சட்டவிரோதமாக வீட்டில் மது விற்பனை செய்வதை காவல்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்