மயிலாடுதுறையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

மயிலாடுதுறையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களுடன் போலீசார் உள்ளனர்.

மயிலாடுதுறையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி சனிக்கிழமை வரை 3 நாட்கள் டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறையில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் முன்பு சட்டவிரோதமான முறையில் மது விற்பனை நடைபெறுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் சென்றது.

இதையடுத்து, கூட்டுறவுத் துறை சார் பதிவாளரும், பறக்கும் படை அலுவலருமான நடராஜன் தலைமையிலான பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் கூறைநாடு பகுதிகளில் அமைந்துள்ள மதுபானக் கடைகளின் முன்பு சட்டவிரோதமான முறையில் மது விற்பனை நடைபெறுவது தெரியவந்தது.

நிகழ்விடத்துக்கு அதிகாரிகள் சென்றதையடுத்து, மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் மது பாட்டில்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து, ரூ.15 ஆயிரம் மதிப்புடைய மொத்தம் 85 மது பாட்டில்களை கைப்பற்றிய பறக்கும் படை அலுவலர் நடராஜன் அவற்றை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையருமான பாலுவிடம் ஒப்படைத்தார்.

Tags

Next Story
ai and business intelligence